இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் தற்போதுவரை 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்துள்ளார்.
சுமார் 500 மில்லியன் ரூபா செலவில் வெலிமடையில் அமைக்கப்படவுள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியொன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்றபோது அவர் இதனைக் கூறியுள்ளார். இவ்வாறு தேங்கி கிடைக்கும் வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment