நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் விளைவாக, தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்படும் நிலை ஏற்படலாம் என E.P.D.P யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த குழப்பக்கர சூழ்நிலையில் இருந்து எமது மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் தலைமைகளிடமும் இருக்க வேண்டும் என, E.P.D.P செயலாளர் நாயகம் கோரிக்கை முன்வைத்துள்ளார். தாம் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வடக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் பயங்கரவாதிகளின் விடுதலை மட்டுமன்றி, தமிழ்மக்களின் அனைத்துவித பிரச்சனைகளுக்கும் தீர்வு காண E.P.D.P முடிந்தவரை முயற்சிக்கும் என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவர்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்து தமிழ் தலைமைகளும், பொறுப்புடன் செயல்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment