தேர்தலை வைத்துக் கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்தும் எண்ணம், என்னிடம் இல்லை- தவராசா சூளுரை.
அடுத்து நாட்டில் இடம்பெறும் நாடாளுமன்ற தேர்தலிலோ, அல்லது மாகாண சபை தேர்தலிலோ போட்டியிட்டு அரசியல் செய்ய தமக்கு எந்தவிதமான எண்ணமும் இல்லை என, முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தவராசா குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து\ வெளியிட்ட போதே, தவராசா இதனை கூறினார்.
தேர்தலில் ஈடுபட்டால் உண்மைகளை மூடிக்கொண்டே அரசியல் செய்ய வேண்டுமென குறிப்பிட்ட தவராசா, அதனால் தேர்தலில் களமிறங்கி பிழைப்பு நடத்துவது தொடர்பான எண்ணமே தனக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் தங்களுடன் நட்புறவாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சு பதவி கிடைத்த மறுநாளே தவராசா அவருடன் இணைந்து விட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே தவராசா இந்த கருத்தை முன்வைத்தார்.
அத்துடன் தாம் ஏற்கனவே தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் எனவும், தேர்தலை இலக்காக வைத்து, எந்த செயற்பாட்டையும் தாம் மேற்கொள்ளவில்லை எனவும் ஏற்கனவே தெரிவித்திருந்ததாக, தவராசா கூறினார்.
டக்ளஸ் தேவானந்தாவுடன் அன்றிலிருந்து இன்றுவரை அரசியல் தொடர்புகளை பேணி வருவதாக கூறிய அவர். அனைவருடனும் ஒன்றாக பழகி வருவதாக தெரிவித்தார்
ஈ.பி.டி.பியில் இருந்து தான் விலகவும் இல்லை, என்னை விலக்கவும் இல்லை. எவரையும் பகைமை நோக்குடன் அணுகவும் இல்லை தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment