எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஒரு போதும் ஏற்க மாட்டேன்.
எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தான் ஏற்க போவதில்லையென, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை, எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டுமென, சபாநாயகர் கரு ஜெயசூர்யவிடம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
தற்போது நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி தன்மை நிலவுகிறது. ஒருபக்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும் என கோருகிறார். மறுபக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டுமென கோருகிறார். இந்த நிலையில் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் குமார வெல்கமவிற்கு பதவி வழங்கப்பட வேண்டுமென்று மற்றுமொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டில் ராஜபக்சவும்,சம்மந்தனும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக மோதி கொண்டிருக்கும் போது, தானும்
இந்த பிரச்சனையை தீவிரப்படுத்த விரும்பவில்லை என, கூறியுள்ளார்.
ஒருசில தவறான அரசியல் ஆலோசனைகளே, இந்த இரண்டு தரப்புக்களிலும் முரண்பாடுகள் இடம்பெற முதன்மை காரணமாக அமைந்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை தவிர்த்து வேறொருவரை சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவராக நியமித்தால், அப்போது தாம் மஹிந்த ராஜபக்சவுக்கு அந்த பதவியை வழங்குமாறு பரிந்துரைப்பேன் என கூறிய குமார வெல்கம, மஹிந்த ராஜபக்ச நாட்டு சூழல் அறிந்து செயல்பட கூடிய, அனுபவம் வாய்ந்த சிறந்த அரசியல் தலைவர் என்று குறிப்பிட்டார் .
அத்துடன் நாட்டில் சில அரசியல் குழப்பங்களுக்கு பின்னால் பெரும் சூழ்ச்சிக்காரர்கள் மறைந்திருப்பதாக குமார வெல்கம கூறினார். அவர்கள் விரைவில் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், தாம் எப்போதும் மஹிந்தவை விட்டோ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை விட்டோ விலக போவதில்லை என்றும், தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்ற எண்ணம் இல்லையென்றும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment