Thursday, January 3, 2019

தொழிற்சங்கத்தினரின் ஜனாநாயக உரிமையை தடுக்கக்கோரி பிரத முகாமையாளர் கோப்பாய் பொலிஸில்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கம் மேற்கொள்ளவுள்ள பாரிய தொழிற்சங்க போராட்டங்களை தடுத்து நிறுத்துமாறு, வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத் தலைவர் அருளானந்தம் அருட்பிரகாஷிற்கு எதிராக கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதம முகாமையாளர் கே.கேதீசனால் நேற்றைய தினம் (02) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் கோப்பாய்ப் பொலிஸாரால் வரவழைக்கப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணையின் இறுதியில் பொலிஸார் தெரிவிக்கையில்,

பொலிஸ் இராணுவம் கடற்படை தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுபடுவதற்கு அனுகூலமான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது உங்களுக்கான கொடையாகும்.

நீங்கள் முன்னறிவித்தலுடன் போராட்டம் செய்கின்றீர்கள். தகுந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றீர்கள். எனவே நீங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பொலிஸ் தரப்பிலிருந்து நாங்கள் எவ்விதமான இடையூறுகளையும் மேற்கொள்ள மாட்டோம்.

ஆனால் மக்களுக்கான சேவையினை செய்வதற்கு மனம் விரும்பி வருகின்ற சாரதி காப்பாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் விடுக்கப்படக் கூடாது எனவும் ஆலோசனை வழங்கினர்.

தொழிற்சங்கத் தலைவர் என்ற வகையில் நாளை(4) மேற்கொள்ளவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு எவரையும் அச்சுறுத்தி அறைகூவல் விடுக்கவில்லை என போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத் தலைவர் அருளானந்தம் அருட்பிரகாஷ் பொலிஸாருக்குப் பதிலளித்தார்.

No comments:

Post a Comment