வடக்கு கல்வி, பெரும் அபாயத்தில் உள்ளது!
வட மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்களை முன்னெடுக்கும் போது, அரசியல் தலையீடுகள் அதிகளவில் காணப்படுவதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலை வட மாகாணத்தில் தொடருமாக இருந்தால், வடக்கு கல்வி பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என, அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வட மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரிய சமநிலையின்மை போன்ற பிரச்சனைகள் அதிகளவில் உள்ளன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, வட மாகாண கல்வி திணைக்களத்திடமும், வட மாகாண கல்வி அமைச்சிடமும் கோரிக்கை முன்வைத்துள்ளதாக, இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் வாடா மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டதுடன், பல பரீட்சைகள் நடத்தப்பட்டன. எனினும் அந்த நியமங்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. அத்துடன் ஆசிரிய நியமனங்களை முன்னெடுக்கும் போது, தகுதியில்லாத சிலருக்கும் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
அரசியல் தலையீடுகளையும் தாண்டி, உயர்நிலை அதிகாரிகளும், பொருளாதார முக்கியஸ்தர்களும் சில ஆசிரிய நியமனங்களை தீர்மானிப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பல ஆசிரியர்கள், உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென, இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
0 comments :
Post a Comment