Thursday, January 3, 2019

மஹிந்தவை தமிழ் தேசியக் கூட்டமைப்பே சிதைத்தது. அழுகின்றார் டிலான்

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் திட்டமான ஒக்டோபர் 26 ஐ, நாடாளுமன்ற உறுப்பினர்களான, எஸ்.பி.திஸாநாயக்க, திலங்க சுமதிபால, லக்ஸ்மன் வசந்த பெரேராவுடன் தானும் சேர்ந்தே கொண்டுவந்ததாக தெரிவித்த டிலான் பெரேரா, அந்த முயற்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைத்து விட்டதாக குற்றம் சுமத்தினார்.

இந்த திட்டத்தை இல்லாதொழித்தமையினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியை அங்கத்துவப்படுத்திய பலர், எம்முடன் இணைய தயாராக இருந்தனர். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு பலத்தை வழங்கியமையினால், ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகி, எமது கட்சிக்கு வரப்போவதாக கூறிய பலர் கடைசி நேரத்தில் வராமல் போயுள்ளதாக டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த தரப்பினரால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனமை குறித்து , விளக்கமளிக்கும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு கூறினார். நாட்டு மக்களின் நலனுக்காகவே, தான் உள்ளிட்ட நால்வரும் மஹந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். எமக்கு பெரும்பான்மை பலம் இருந்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பு குறுக்கிட்டு எல்லாவற்றையும் குழப்பி விட்டதாக, டிலான் பெரேரா கூறியுள்ளார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த குழப்பத்தை விளைவித்ததால், தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நன்மை ஏற்பட போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பு உண்மையில் இந்த நியமன விடயத்தில் நடுநிலையாகவே இருந்திருக்க  வேண்டும். அப்படி நடுநிலையாக இருந்திருந்தால், எமக்கு வெற்றி கிட்டியிருக்குமென டிலான் பெரேரா கூறியுள்ளார்.

தற்போது புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என, ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ்  தேசிய கூட்டமைப்பும், வலியுறுத்தி வருகின்றன. எனினும் புதிய அரசியலலமைப்புக்கு ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் ஆதரவும் அவசியமாகும். நாம் ஒரு போதும் புதிய அரசியல் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லையென, டிலான் பெரேரா கூறியுள்ளார்.

எமது ஆட்சிக்கு தடையாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு  வெகு விரைவில் வீடு திரும்பும் என, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment