Saturday, January 5, 2019

பரந்த கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்வோம் - மஹிந்த ராஜபக்ச.

அடுத்து வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் பரந்த கூட்டணியாக ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் .

இந்த பரந்த கூட்டணியில் சிறிலங்கா சுதந்திர கட்சியும் உள்ளடக்கப்படும் என, அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தான்டு கொண்டாட்டங்களை தமது அலுவலக காரியாலயத்தில் நடாத்திய பின்னர், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த போதே, மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். நாட்டு மக்களின் ஆதரவு எம்மிடமே உள்ளது. அந்த அதிகாரமே, எம்மை பலமான கூட்டணியாக்கியுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச வெகு விரைவில் மக்களின் விருப்பம் நிறைவேறும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment