Friday, January 4, 2019

சீலரத்ன தேரரும் நிவாரணப் பொதிகளுடன் கிளிநொச்சியில்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் முண்டியடித்து உதவி வருவது யாவரும் அறிந்தது.

அவ்வாறு முண்டியடிப்பவர்களில் பெரும்பாலானோர், அரசியல் பிரச்சாரமாகவே அக்கருமத்தை மேற்கொள்ளும் இத்தருணத்தில் பௌத்த துறவியான பத்தரமுல்லை சீலரத்ன தேரர் இன்று பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.

உலர் உணவுப் பொதிகளுடன் சென்ற அவர் அங்கு குழுமியிருந்த மக்களுடன் பேசுகையில்,

இங்குள்ள மக்கள் இத்தனை கஷ்டங்களை சுமந்தவர்களாக வாழ்கையில், இம்மக்களின் வாக்குகளில் தெரிவான பிரதிநிதிகள் என்னதான் செய்கின்றார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அத்துடன் வடக்கு கிழக்கு ,மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுபினர்களின் பிள்ளைகள் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் நல்ல கல்லூரிகளில் கல்வி கற்கின்றார்கள், ஆனால் அந்த வசதியை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் மக்களது பிள்ளைகளை இவர்கள் திரும்பியும் பார்கிறார்கள் இல்லை எனக் கூறியுள்ளார்.








No comments:

Post a Comment