அண்மைக் காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒருபக்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த பிரச்சினை உள்ள நிலையில், தற்போது இரட்டை பிரஜாவுரிமை தொடர்பிலான சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினtர்கள் பலர் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருப்பதாக, பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எந்த உறுப்பினரும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருப்பதாக தாம் இதுவரை அறிந்திருக்கவில்லை என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை பிரஜாவுரிமை குறித்து கூட்டு எதிரணியைச் சேர்ந்த சிசிர ஜெயக்கொடி, குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஆனால் அவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பில் யாரும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருக்கவில்லை என தெரிவித்த மாவை சேனாதிராஜா, இந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமானால் ஆதாரங்களை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் இத்தகைய போலியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், விரிவாக ஆராய வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment