Friday, January 4, 2019

நாமல் குமாரவின் வாய்க்கு போட்டது நீதிமன்று போட்டது பூட்டு. போலி சான்றிதழ் உண்மை.

ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்து நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றையே ஏற்படுத்தியிருந்தார் நாமல் குமார எனப்படும் நபர்.

மேற்படி சதி தொடர்பாக தொடர்சியாக அவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுவந்த நிலையில், இன்றிலிருந்து மேற்படி சதிகள் தொடர்பாக அவர் பொது இடங்களிலோ அன்றில் ஊடகங்களுக்கோ கருத்து வெளியிடக்கூடாது என நீதிமன்று தடை உத்தரவு விதித்துள்ளது.

பிரமுகர்கள் கொலைச் சதி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இன்று நீதிமன்றில் விடுத்த வேண்டுதலை அடுத்தே நீதிமன்று இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது. நாமல் குமார தொடர்ந்தும் மேற்படி கொலை சதி தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுவருவதானது விசாரணைகளுக்கு தடையாகவுள்ளதாக சீஐடி யினர் மன்றுக்கு தெரியப்படுத்தினர்.

இதேநேரம், நாமல் குமார விமானப்படையில் இணைவதற்கு போலிக் கல்விச் சான்றுதலை வழங்கியதாக சீஐடி யினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாமல் குமாரா தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

தான் போலிச் சான்றுதழ் வழங்கியது உண்மை என்றும் அதற்காக தனக்கு நீதிமன்று எந்த தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறைப் பகுதியிலுள்ள கிராமப் பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற நாமல்குமார க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 3 பாடங்களே சித்தியடைந்திருந்த நிலையில், எட்டுப்பாடங்களும் சித்தியடைந்துள்ளதாக போலிச் சான்றிதழ் தயாரித்து 2010 ம் ஆண்டு விமானப்படையில் இணைந்துள்ளார்.

பின்னர் 2012 விமானப்படையிலிருந்து விலகி இலங்கை இராணுவத்தின் பொறியில் பிரிவில் இணைந்து ஒன்றரை வருடங்கள் சேவை செய்துவிட்டு இராணுவத்தை விட்டு தப்பியோடியவர் என்று தகல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இவை அனைத்துக்கும் நாமல் குமார தண்டனை பெறலாம் என நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment