Saturday, January 5, 2019

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில், சுற்றாடல் சார்ந்த பிரச்சனைகள் இல்லை - மின்சக்தி அமைச்சர் ரவி .

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் சுற்றாடல் ரீதியான எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சர் ரவி கருநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த செயல்திட்டத்தில் ஏதேனும் குளறுபடிகள் இருப்பின் அது குறித்து ஆராய்ந்து தீர்வு காண்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த பணிகளை திறன்பட செயல்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என குறிப்பிட்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க, வெகு விரைவில் இந்த நிலையத்தின் பயனை மக்கள் அடையமுடியும் எனவும் கூறினார்.

தமது அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்றைய தினம் , மின்னுற்பத்தி நிலையத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

இது முக்கியமான மின்னுற்பத்தி நிலையம் என்பதுடன் நாட்டின் தேவைக்கு ஏற்றவாறு அதிகளவான அலகுகள் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது.

தான் பதவியேற்றதுடன் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் தற்போதைய நிலைமையை ஆராய வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்சார சபையின் செயற்றிறன் அடிப்படையில் இங்கிருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு தெரிந்தவகையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com