Wednesday, January 2, 2019

நாமல் குமாரவை சுற்றி வளைக்கின்றது சீஐடி. மோசடிச் சான்றுதழ்

கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் நபராக காணப்பட்டவர் நாமல் குமார எனப்படும் மோசடி தடுப்பு படையணி என்ற பெயர் கொண்ட அமைப்பொன்றின் தலைவரான நாமல் குமார.

இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குனர் நாலக டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியிட்டிருந்தார். இத்தகவலின் அடிப்படையில் குறித்த டிஐஜி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் விளக்க மறியலிலும் வைக்கப்பட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

மேலும் நாமல் குமாரவினால் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் குற்றச் சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் பொலிஸ் துறை தெரிவிக்கின்றது.

இந்நிலையில் ஊழல் ஒன்று தொடர்பாக குற்றப்புலனாய்வு துறைக்கு முறைப்பாட்டிற்காக சென்ற நாமல் குமாரவிடம் போலி கல்வி சான்றிதழ்கள் வழங்கியமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கு இணைவதற்காக நாமல்குமாரவினால் வழங்கப்பட்டிருந்த கல்வி பொது சாதாரண பரீட்சையில் பத்து பாடங்களிலும் சித்தி என சான்றித்களில் குறிப்பிடப்படிருந்த போதிலும் உண்மையில் 3 பாடங்களில் மாத்திரமே சித்தியடைந்துள்ளதாக சீஐடி யினர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment