நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து போலியான பரிமாற்றங்கள் இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தம்மை இலங்கை மத்திய வங்கி என அடையாளப்படுத்தி, மின்னஞ்சல் மூலமாக இவ்வாறான போலியான பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாக, பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த மின்னஞ்சல் தரவுகளை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என மத்திய வங்கி, பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
''நோட்ஸ் ப்ரோம் சென்ட்ரல் பேங்க் ஒப் ஈ.பி.எப்'' என்ற தொனிப்பொருளில், நாட்டின் முன்னணி நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து, இந்த போலியான பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக, மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக, இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இந்த முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment