ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பின் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என, முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே, அவர் இதனை கூறினார்.
ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் சகோதரர்களான, சமல் ராஜபக்ஷவும், கோத்தாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச தமது நிலைப்பாட்டை அறிவித்துளார்.
நாங்கள் இன்னமும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யாது காத்துக் கொண்டிருக்கின்றோம். நிச்சயமாக நாங்கள், வெற்றிபெறக் கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை அறிவித்த பின்னரே, நாம் எமது வேட்பாளர் யாரென்பதை அறிவிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஐக்கிய தேசிய கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ தகவல்களையும் வெளியிடாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment