சிறார்கள் தொற்றா நோய்க்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்து வருகின்றது. சுகாதாரத்துறை எச்சரிக்கை
நாட்டிலுள்ள சிறார்கள் பலர், தொற்றா நோய்க்கு உள்ளாகும் நிலை தற்போது அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டிலுள்ள பல சிறார்களிடம் இது குறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக, சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். பாடசாலை மாணவர்களில் 13 வயது முதல் 16 வயதான மாணவர்களை அடிப்படையாக கொண்டு, இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் திலக் ஸ்ரீவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த மாணவர்களில் சுமார் 20 சதவீதமானவர்கள் எந்தவித உடற்பயிற்சியும் இன்றி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இது குறித்து தாம் அதிக கவனம் செலுத்துவதாகவும், தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் திலக் ஸ்ரீவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு தொடர்பான விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment