ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய தவறொன்றை புரிந்துவிட்டதாக அமைச்சர் பாலித்த தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார். சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற பாலித்த தெவரப்பெரும, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து வெளியிட்ட கருத்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரத் பொன்சேகாவை ''பீல்ட் மார்ஷல்'' என்று தரம் உயர்த்தியமை மிகப்பெரும் தவறு என கூறிய பாலித்த தெவரப்பெரும, பீல்ட் மார்ஷலுக்குரிய எந்தவித தகைமையும் சரத் பொன்சேகாவிடம் இல்லையெனவும் தெரிவித்தார்.
அத்துடன் சரத் பொன்சேகா இலங்கையின் ஜனாதிபதியாக நியமிக்கப்படாமை, இலங்கையின் அதிஷ்ட்டமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் சரத் பொன்சேகாவினால் 400 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததாக அமைச்சர் பாலித்த தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமது கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம், மக்களுக்கு பெரும் ஆபத்தை தரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது சரத் பொன்சேகா, தமக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லையென, அதிருப்தி அடைந்துள்ளார். அத்துடன் அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என பலர் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர் பாலித்த தெவரப்பெரும, வேண்டுமானால் தமது அமைச்சு பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க முடியும் என கேலியாக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment