போதைப்பொருள் ஒழிப்பு குறித்து, பிலிப்பைன்ஸுக்கு புகழாரம் சூட்டிய மைத்திரியை, மனித உரிமை அமைப்புக்கள் கண்டிக்கின்றது.
உத்தியாகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் நோக்கி விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, சுற்றுலா,கல்வி,பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான சில ஒப்பந்தங்கள் கைச்சாத்தானதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டிருந்தது.
இந்த விஜயத்தை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்திருந்தமைக்கு மனித உரிமை அமைப்புக்கள் பல, பகிரங்க கண்டனம் வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டியூட்ரேயின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முழு உலகிற்கும் சிறந்த உதாரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புகழாராம் சூட்டியிருந்தார்.
அதேவேளை, போதைப்பொருள் அபாயத்தை கட்டுப்படுத்த, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் அடிச்சுவடுகளை, பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து ஜனாதிபதியின் மேற்படி கருத்தை கடுமையாக எதிர்த்த நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிலிப்பைன்ஸ் ஆராய்ச்சியாளர், பிலிப்பைன்ஸின் நடைமுறையை உலகில் எந்த நாடும் பின்பற்றவே கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பிலிப்பைன்ஸின் செயன்முறையை பின்பற்றுவது தொடர்பாக ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தவறான கொள்கைகளையே முன்னெடுத்து வருவதாக அவர் இதன்போது குற்றம் சுமத்தினார்.
0 comments :
Post a Comment