புதிய ஆளுநர்கள் பதவியேற்றனர். கிழக்கை ஆளப்போகின்றார் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐந்து மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
அதன்படி மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி, மத்திய மாகாண ஆளுநராக சத்தேந்திர மைத்ரி குணரத்னவும், வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்கவும், வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்ன பண்டாரவும், கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஓன்பது மாகாணங்களுக்குமான முன்னாள் ஆளுநர்களிடம் ஜனாதிபதி ராஜினாமா கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், ஐவர் இன்று நியமனம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறியவருகின்றபோதும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களுக்கு சார்பான ஒருவரை நியமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் அறியக்கிடைக்கின்றது.
0 comments :
Post a Comment