பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய நீதிமன்று அனுமதி.
ஜனாதிபதி மற்றும் பிரமுகர்கள் சிலரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக நாமல் குமார வெளியிட்ட ஒலிப்பதிவுகள் தொடர்பில் விசாரணை செய்துவரும் சீஐடி யினர் பொலிஸ் மா அதிபரின் நாமலுடனான உரையாடல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன் பிரகாரம் பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரியை பெற்றுக்கொள்ள நீதிமன்றின் அனுமதியை இன்று கொழும்பு கோட்டை மஜிஸ்றேட் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வேண்டியதன் பிரகாரம் அதற்கான அனுமதியை நீதிமன்று வழங்கியுள்ளது.
நாமல் குமாரவின் தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகள் ஹொங்கொங் நகரிலுள்ள தொலைபேசி உற்பத்தி நிறுவனத்திடமிருந்து பெற்றுவரப்பட்டது யாவரும் அறிந்ததே. இவ்வாறு பெற்றுவரப்பட்டுள்ள ஒலிப்பதிவுகளில் எதிர்பாராத ஒலிப்பதிவுகளும் அடங்கியுள்ளதாக சீஐடி தகவல்கள் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment