இந்த ஆண்டுக்கான பாதீட்டின் இலக்கு.
இந்த ஆண்டு முன்வைக்கப்படவுள்ள பாதீடு, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான அரச நிதியை பலப்படுவதை இலக்காக கொண்டே முன்வைக்கப்படும் என, நிதியமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படவுள்ள நிலையில், நிதியமைச்சு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்கு சிறப்பான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிதியமைச்சு, அந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாவும் கூறியது.
அரசாங்கத்தின் வருமானத்தை மொத்த தேசிய உற்பத்தியில் 17 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துக் கொள்வதற்கான யோசனையும், இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் மீண்டுவரும் செலவுகளை மொத்த தேசிய உற்பத்தியில் 15 சதவீதத்திற்கு மட்டுப்படுத்துவதுடன், அரசாங்கத்தின் முதலீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதத்தை பேணுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் நாட்டின் நிதி நிலையை பலப்படுத்துவதாக அமையுமென நிதியமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் குறித்த சட்டமூலம், எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment