Thursday, January 3, 2019

முதலில் ஜனாதிபதி தேர்தலா? அல்லது பாராளுமன்ற தேர்தலா? - ஐக்கிய தேசிய கட்சி.

தற்போதைய அரசாங்கத்தின் பலம், தேர்தலுக்கு பின்னரே நிரூபிக்கப்படும் என, பொது எதிரணி சூளுரைத்து வருகிறது. எனினும் தேர்தலில் அமோக வெற்றியுடன், அடுத்த ஆண்டும் நாமே ஆட்சியை அமைப்போம் என, இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டில் முதலாவதாக ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என கூறிய நளின் பண்டார, மக்கள் அதற்கான ஆதரவை வழங்க தயாராக உள்ளதாகவும் கூறினார். அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென, சிலர் கூறி வருகின்றனர். அதனாலேயே ஐக்கிய தேசிய கட்சி, தேர்தலை நடத்த விரும்பவில்லையென்றும் அவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஆனால் தேர்தலை நடத்துவது குறித்து எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மக்களின் பலத்தை பெற்ற எமக்கு, தேர்தலின் பின்னர் அதிகார பலத்தை பெறுவது சுலபமான காரியம் என, நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பலர், தற்போது அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்க தயாராகவுள்ளனர். எனவே இந்த பலத்தை கொண்டு, நிச்சயமாக தேர்தலில் பாரிய வெற்றியை எம்மால் பெற முடியுமென, இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


No comments:

Post a Comment