கட்டுகஸ்தொட்ட, கொஹாகொட குப்பைமேட்டு விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த 2017 ம் ஆண்டு மீதொட்டமுல்லையில் குப்பைமேடு சரிந்த சம்பவம் முழு இலங்கையும் அதிர வைத்திருந்தது. இந்த மாதிரியான
அசம்பாவிதங்கள் மீண்டும் நாட்டில் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக கட்டுகஸ்தொட்ட, கொஹாகொட குப்பைமேட்டு விடயத்தில் துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
கொஹாகொட கழிவு முகாமைத்துவத்தின் நடவடிக்கைகளை முறைமைப்படுத்தல் தொடர்பில், நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கண்டி நகரசபை உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்றங்களின் குப்பைகளை வௌியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் கட்டுகஸ்தொட்ட, கொஹாகொட குப்பைமேட்டினால் அந்த பகுதியில் வசிக்கும் பொருளாதார நிலையில் நிறைந்தசவால்களை எதிர்நோக்கி வாழும் அப்பகுதி மக்கள், இந்த குப்பை மேடு தொடர்பில் தமது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையில் இந்த குப்பைமேடு தொடர்பில் தற்போது ஜனாதிபதி தலையிட்டு, குப்பைகளை மீள்சுழற்சி முறையொன்றினூடாக வௌியேற்றுவதற்கான வேலைத்திட்டமொன்ற செயற்படுத்துமாறு நகரசபை மற்றும் மாகாணசபைகளை பணித்துள்ளார். இந்த வேலை திட்டத்தை முன்னெடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment