திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனம் செய்து வைத்தார் மைத்திரிபால சிறிசேன!
இலங்கை பௌத்த மக்களின் புனித நூலான திரிபீடகம் இன்று தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத் நிகழ்வானது ஜனாதிபதி தலைமையில் மாத்தளை அலுவிகாரையில் இடம் பெற்றது.
2500 வருடங்களாக பௌத்த தேரர்களினாலும் பௌத்த மக்களினாலும் பாதுகாக்கப்பட்டு வந்த இத் திரிபீடகமானது கௌதம புத்தரின் போதனைகளை உள்ளடக்கிய நூலாகும். இப் நூலினை பாதுகாக்கும் நோக்குடன் மஹாநாயக்க தேரர்களின் ஆலோசனை, வழிகாட்டால்களின் படி தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்படுகிறது.
உலகில் உள்ள புனித நூல்களில் திரிபீடகமும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. திரிபீடகமானது முன்று பிரிவுகளான ஒழுக்க பீடகம், சுத்த பீடகம், அபிதம்ம பீடகம் ஆகியவற்றை கொண்டிருப்பதினாலேயே திரிபீடகம் எனும் நாமம் சூட்டப்பட்டுள்ளது.
மஹா சங்கத்தினரால் பேணப்பட்டு வந்த இத்திரிபீடகமானது முதன் முறையாக முதலாவது கிறிஸ்து வருடத்தில் மாத்தளை அலுவிகாரையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பின் 1956ம் ஆண்டு காலப்பகுதியில் முழுமையான நூலாக அச்சிடப்பட்டது. பாளி மொழியில் அமைந்துள்ள இந்நூலானது ஆரம்ப பௌத்த நம்பிக்கைகளை கொண்டதாக காணப்படுகிறது.
1500 த்திற்கு மேறப்பட்ட மஹா சங்கத்தினருடன் நிகழ்வு நடைபெற்ற அதேநேரம் நாடளாவிய ரீதியில் உள்ள விகாரைகளில் விசேட பூசைகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
சியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரி மகா விகாரையை சேர்ந்த மகா நாயக்கர் வண. வரக்காகொட ஞானரத்தன தேரர், சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விகாரையை சேர்ந்த அனுநாயக்கர் வண. நியங்கொட விஜத்தசிறி தேரர், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் பண்டிதர் வண. கொட்டுகொட தம்மவாச மகா நாயக்க தேரர் உள்ளிட்ட நாடு பூராவும் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மகா சங்கத்தினர் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment