சிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.
யாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அவ்வேளையில் அதற்கு சிறிதரன் காட்டிய பிரதேசவாத எதிர்ப்பினால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இரணைமடுவை வீணாகும் 60 சதவீதனமான நீரை, யாழ்ப்பாணத்தற்கு கொண்டு வருவதற்கான திட்ட முன்மொழிவை தம்மிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, இரணைமடு நீர்தேக்க செயல்திட்ட அதிகாரிகளுக்கு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.
வட மாகாண ஆளுநர், திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு, இரணைமடு நீர்தேக்கத்தையும், இரணைமடு நீர்தேக்கத்தின் செயல்த்திட்ட அலுவலகத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போதே, ஆளுநர் இந்த பணிப்புரையை அதிகாரிகளுக்கு விடுத்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 10 ஆம் திகதி இரணைமடு நீர்தேக்கத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட வட மாகாண ஆளுநர், வான்கதவுகளின் திருந்ததைப் பணிகள் உள்ளிட்ட பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என பணிப்புரை விடுத்திருந்த நிலையில், இன்று அவற்றை ஆராயும் பொருட்டு ஆளுநர் சுரேன் ராகவன், அங்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது இரணைமடு நீர்தேக்கத்திலுள்ள 07 வான்கதவுகளில் காணப்பட்ட குறைப்பாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு, ஜனவரி மாதம் 31 ஆம் திகதி கையளிக்கப்படும் எனவும், தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு தன்னார்வ ரீதியான கண்காணிப்புகளை மேற்கொள்ள, நீர்த்தேக்கத்தை முன்னெடுத்து செல்லும் தனியார் நிறுவனம், ஆளுநர் சுரேன் ராகவனிடம் உறுதியளித்தது
தற்போதுள்ள இரணைமடு நீர்த்தேக்கத்தில் வெறும் 40 சதவீத நீரிலேயே விவசாயம் மேற்கொள்ளப்படுவதுடன், 60 சதவீதமான நீர் சமுத்திரத்திற்கு செல்வதாக, கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் சுதாகரன் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து நீர்த்தேக்கத்தில் இருந்து வீணாகும் 60 சதவீத நீரை, யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கான முன்மொழிவை, வெகு விரைவில் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன், இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், கலந்தாலோசனை மேற்கொள்ளவுள்ளதாகா வட மாகாண ஆளுநரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment