இலங்கையில் அண்மைக்காலமாக ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, முக்கிய நியமனங்ளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பல எதிர்ப்புக்களின் மத்தியில் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், 19 ஆம் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து விட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். மறுபக்கம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்த இந்த திருத்தம், உடன் நீக்கப்பட வேண்டும் என, பிறிதொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த பரபரப்பை தாண்டி, தற்போது நாட்டின் ஜனாதிபதி அமைச்சர்களுக்கான விடையதானங்களை ஒதுக்குவதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவிற்கு உரிய விடயதானங்கள் வழங்கப்படவில்லை என்று பரவலாக செய்திகள் வெளியாகின. எனினும் இது குறித்து தாம் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் பற்றிய பல கேள்விகள் எம் மத்தியில் எழுக்கின்றன. 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதியிலும், இன்று வரை ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி வருவதாக அறியமுடிகிறது.
அரசமைப்பின் 43 ஆவது உறுப்புரையில், இது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி காலத்துக்கு காலம், பிரதமரின் கலந்தாலோசனையுடன், தாம் அவசியமென கருதினால் அமைச்சரவை எண்ணிக்கை, அமைச்சர்களின் விடையதானங்கள், உள்ளிட்ட தீர்மானகளை தீர்மானிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அமைச்சரவை தீர்மானங்கள் பற்றி, பிராமருடன் ஜனாதிபதி கலந்தாலோசனை செய்ய வேண்டும் என கூறப்பட்டாலும், அது ''அவசியப்பட்டால்'' மட்டுமே என்ற ஒரு பதம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 43 ஆவது உப பிரிவில், ஜனாதிபதி எந்த நேரத்திலும் அமைச்சரவையின் விடயங்களின், பணிகளினதும் குறித்தொதுக்குதல்களை மாற்ற முடையும் என கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் தமது அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என 19 ஆம் திருத்தத்திலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இந்த அதிகாரங்களை கொண்டே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது அமைச்சரவை விடையதானங்கள் உள்ளிட்ட விடயங்களில் தமது அதிகார பலத்தை காட்டுவதாகவும் கூறப்படுகிறது. எனவே அரசியல் அமைப்பின் 19 ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்ட போதிலும், சில முக்கிய தீர்மானங்களின் போது, தீர்மானம் எடுக்கும் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment