Tuesday, December 4, 2018

ஹிருணிகா தலைமையில் ஐ.தே.முன்னணி பா.உறுப்பினர்கள் ரூபவாகினியினுள் நுழைந்து அட்டகாசம். STF வரவழைக்கப்பட்டது.

ரூபாவாகினிக் கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பலவந்தமாக கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்துள்ள இவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் செய்திகள் வெளியிட்டதைப் போன்றே அரச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

கூட்டுத்தாபனத்தின் தலைவரோ பொறுப்புவாய்ந்த அதிகாரரிகளோ இல்லாத நேரத்தில் இவர்கள் நுழைந்ததால் அங்கு பதட்டநிலை உருவாகியுள்ளது. அதை தொடர்ந்து ஸ்தலத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் அரசு ஒன்று இல்லாத நிலையிலும் அதிகாரிகளுக்கு சரியான அறிவுறுத்தல்கள் இல்லாத நிலையிலும் இவ்வாறு அரசியல்வாதிகள் நுழைந்து சிக்கல்களை உருவாக்குவது கட்சிபேதங்கள் இன்றி கண்டிக்கத்தக்கதாகும்.

குறிந்த நிறுவனங்களின் தலைவர்கள் பக்கசார்பாக நடந்துகொள்வாகளாயின் அது தொடர்பில் எழுத்துமூலமாக தெரியப்படுத்தி நிலைமையை சீர்செய்துகொள்வதே இத்தருணத்தில் பொருத்தமானதாகும்.

No comments:

Post a Comment