Thursday, December 13, 2018

கல்விக் கூட்டுறவு சங்கத்தின் (EDCS) தடை நீக்கம்.

கல்விக் கூட்டுறவு சங்கத்தின் தற்போதைய பணிப்பாளர் சபைக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி நீதிமன்றத்தின் ஊடாக விதிக்கப்பட்ட தடையுத்தரவு இன்று (13) நீக்கப்பட்டுள்ளது.

கல்வின் அமைச்சில் தொழில் புரியும் அங்கத்தவர் ஒருவர் உள்ளிட்ட 04 அங்கத்தவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கால் கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் நிகழ்கால பணிப்பாளர் சபையின் நடவடிக்கைகள் கடந்த அக்டோபர் 12ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது. அதன் காரணமாக நாடு பூராவும் உள்ள அதன் 21 மாவட்ட அலுவலகங்களின் 195000 அங்கத்தவர்களின் சேவை முற்றாகச் செயலிழந்தது.

எவ்வாறாயினும் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், பணிப்பாளர் சபைக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை நீக்கியதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com