நாடும் மக்களும் எந்ந நிலைக்குச் சென்றாலும் பரவாயில்லை தனக்கு குழுக்களின் பிரதித் தலைவர் பதவியும் அதற்குரிய சலுகைகளும் கிடைத்தால் போதும் என்ற மனநிலையுடன் செல்வம் அடைக்கலநாதன் இருக்கின்றார் எனக் கூறியுள்ள ரெலோவின் முன்னாள் முக்கியஸ்தர் கணேஸ் வேலாயுதம் மறுபுறத்தில் கோடீஸ்வரன் ஒப்பந்தம் செய்வதிலும் அரசிடம் தேங்கியுள்ள நான்கு கோடி ரூபாய் ஒப்பந்தப் பணத்தை பெறுவதிலுமே குறியாக இருக்கின்றார் எனக் குற்றஞ்சாடியுள்ளார்.
இன்றைய சூழலில் செல்வம் அடைக்கலநாதனிற்கு நல்லாட்சி அரசில் சாப்பாடு, தங்குமிடம், போக்குவரத்து, உடைகள் அனைத்தும் இலவசம் என்று குறிப்பிடும் கணேஸ் வேலாயுதம், அவர் வகிக்கும் பதவியின் ஊடாக 30க்கு மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும் அக்கருமத்தினை செய்யாமால், கிறிஸ்தவ மத குரு போன்று வெள்ளை உடையில் வலம் வருவதால் எதுவும் சாதிக்க முடியாது என்றும் சாடியுள்ளார் அவர்.
இதே நேரம் ரணில் விக்கிரமசிங்கவை தலைவராக்க கோரிய சத்தியக்கடதாசியில் நிபந்தனைகள் இன்றி செல்வம் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் கையொப்பம் இட்டது தொடர்பில் ரெலோ அமைப்பினர் தமது அதிருப்தியை தெரியப்படுத்தியுள்ளனர். நேற்று இடம்பெற்ற ரெலோ ஒன்று கூடலின்போது இது தொடர்பான காரசாரமான கருத்தாடல்கள் நிகழ்ந்ததாக அறியமுடிகின்றது.
No comments:
Post a Comment