விஜேகுணவர்தன வெளியே, நேவி சம்பத்தும் நாலக்க டி சில்வாவும் உள்ளே.
வெள்ளை வேனில் 5 மாணவர்கள் உட்பட 11 கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பான குற்றச்சாட்டில் கைதான முப்படைகளின் பிரதானி கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இன்று கொழும்பு கோட்டை நீதிமனறத்தில் நீதிவான் முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர் படுத்தப்பட்ட அவரை 10 இலட்சம் பெறுமதியான இரு சரீரபிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் முப்படைகளின் பிரதானி பாதுகாப்பு வழங்கினார் என்று கூறப்படும் லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத்தை தொடர்ந்தும் எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்க மறியிலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இதேநேரம் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 11 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தொடர்ந்து 5 நாட்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment