சமாதானத்தை மீற இடமளியாதீர்! கிளிநொச்சியில் சுவரொட்டிகள்.
வவுனதீவுப் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் வன்னியிலிருந்து சென்றவர்கள் தொடர்பு பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகர்ப் பகுதிகளிலும் , விஸ்வமடு, வட்டக்கச்சி என பல இடங்களில் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது
குறித்த சுவரொட்டிகளில்
நாட்டின் சமாதானத்தை மீறுவோர்கள் நாட்டின் துரோகிகள்
பாதாள மற்றும் வன்முறைக் காரருக்கு இடமளிக்க வேண்டாம்
சமாதானத்தை நடைமுறைப்படுத்த ஒன்று சேருங்கள்
சமாதானத்தை மீற இடமளிக்க வேண்டாம்
என்ற வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது
இச் சுவரொட்டிகள் இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை வேளையில் ஒட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது
30 வருடகால யுத்தத்தை அனுபவித்த மக்கள் அதிலிருந்து மீண்டு மீண்டும் ஒரு யுத்தத்திற்குள செல்ல விரும்பவில்லை என்பதை குறித்த சுவரொட்டிகள் எடுத்துரைக்கின்றது.
0 comments :
Post a Comment