Thursday, December 6, 2018

சிறிதரனுக்கு அடித்தார் ஆழுநர் ஆப்பு! நாளை சிறிசேன கையாலாம்.

இரணைமடுக்குளம் நிரப்பி வழியும் நிலையை எட்டியுள்ளதுடன் இதன் வான்கதவுகளை திறந்துவிட ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் வான்கதவுகளை தனது கையாலேயே திறந்துவிடவேண்டும் என எம்பி சிறிதரன் தலையால் கிடங்கு கிண்டினார்.

ஆனால் இரணைமடுக்குள அபிவிருத்தி பணிகள் ஆரம்பமானபோது, அதனை தடுத்து நிறுத்துவதற்கு பெரும்பாடுபட்டவர் சிறிதரன். அவ்விடயத்தை வைத்து கிளிநொச்சி யாழ்பாணம் என்ற பிரதேசவாதத்தைக்கூட ஏற்படுத்தியிருந்தார். இவ்விடயங்களை நினைவுகூர்ந்த ஆழுநர் அபிவிருத்திக்கு தடையாக நின்ற ஒருவர் கையால் அதை திறப்பது அபத்தம் என்றும் அறிவித்து விட்டார் என ஆழுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அத்துடன் நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியை இரணைமடுவுக்கு வரவழைத்து அவர் கையால் வான்கதவுகள் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக இதுவரை எவ்வித அறிவித்தல்களும் விடுக்கப்படாதபோதும், இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் கேபி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.




No comments:

Post a Comment