மஹிந்தவுடனான கூட்டில் மாற்றமில்லை. இடையூறு ஏற்படுத்தினால் வெளியேற்றப்படுவீர்கள். மைத்திரி எச்சரிக்கை.
எதிர்வரும் தேர்தல்களில் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்தே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது என்றும், இதற்கு இடையூறு ஏற்படுத்தும், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐதேக அரசாங்கத்தில் இணைந்து அதனைப் பலப்படுத்த முனையும், அமைப்பாளர்கள், முதலில் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி அதனைச் செய்யலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடும், ஜனாதிபதியின் திட்டத்துக்கு கட்சியின் ஒரு பகுதி தொகுதி அமைப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், சுதந்திரக் கட்சி தனியான திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர்.
சுதந்திரக் கட்சி பொதுச்செயலர் மீதும் கட்சியின் சில மூத்த அமைப்பாளர்கள் மீதும், அவர்கள், அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அமைப்பாளர்களுக்கான கூட்டம் திட்டமிடப்பட்டிருந்ததற்கு முன்பாகவே முடிவுக்கு வந்தது.
0 comments :
Post a Comment