ஊடக அத்துமீறல்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்படும். மீண்டும் ரணில் விக்கிரமசிங்க.
பொய் தகவல்களை வெளியிட்ட கறுப்பு ஊடகங்கள் தொடர்பாக தகவல்கள் வெளியிடுவதாகவும் ஜனவரி மாதம் நடைப்பெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக சட்டமூலம் ஒன்றை முன்வைக்க போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை நியமித்தலின் போது வெளியிடப்பட்ட பெயர்பட்டியலில் நீக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர்பட்டியல் சில ஊடகங்களில் வெளியிடப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் (20) உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த செயற்பாடு தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும் இவ்வாறு பெயர்பட்டிய்ல்களை வெளியிட்ட ஊடகங்கள் காசோலை ஒன்றை தயார் நிலையில் வைத்துக் கொள்வது நன்று எனவும் மேலும் தெரிவித்தார்.
விஜிதமுனி சொய்சா உட்பட சிலர் கபினட் அமைச்சரவை பெயர் பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பெயர்பட்டியல் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பப்படவில்லை எனவும் பொய் பிரச்சாரங்களின் முலம் இல்லாத பிரச்சினைகளை உருவாக்க ஒரு கூட்டம் முயற்சிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்தோடு இவ்வாறு பொய் பிரச்சாரங்களை முன் வைக்கும் ஊடக நிறுவனங்கள் தொடர்பாக தான் வெளியிடுவதாக கூறினார். இத்தகைய ஊடகங்களுக்கு எதிராக செயற்படுவது ஊடக சுதந்திரத்தை முடக்குவதாக அமையாது. வழங்கப்பட்டிருக்கும் ஊடக சுதந்திரத்தை தவறான வழிகளில் பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என பிரதமர் அவர்கள் தொடர்ந்தும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment