எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி வாபஸ் பெறமாட்டாராம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் பாரளுமன்றை கலைப்பதாக வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பல்வேறுப்பட்ட எழுமானங்கள் கூறுப்பட்டது.
இந்நிலையில் பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த சந்தர்ப்பத்திலும் வாபஸ் பெறமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியுடனான தேசிய அரசாங்கத்தை தொடர முடியாது என்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளார்.
எனினும் ஐ.தே.கவின் தொடர்ச்சியான முறையற்ற செயற்பாடுகளின் காரணமாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான தீர்மானத்தை அறிவித்தார் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
0 comments :
Post a Comment