Thursday, December 6, 2018

சிங்கள மொழியே இந்நாட்டின் முடிவு செய்யும் மொழியாம். சொல்கின்றார் கம்பன்பில

இலங்கையில் எழுந்துள்ள அரசியல்யாப்பு சர்ச்சை விவகாரம் உச்ச நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த விடயம். இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் பல்வேறு கோணங்களில் வாதங்களையும் , அர்த்தங்களையும் கற்பிக்கின்றனர்.

இந்நிலையில் மனுதாரர்கள் எதையும் தெளிவாக புரிந்து கொள்ளாமலே மனுவை முன் வைத்துள்ளனர் என்று நகைக்கின்றார் பாராளுமன்ற உறுப்பினர் கம்பன்பில.

33(2)உறுப்புரையின் படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு; பாராளுமன்றத்தை கூட்டுதல் கலைத்தல் ஒத்திவைத்தல் ஆகியவற்றிற்கான அதிகாரம் உண்டு என்று திட்டவட்டமாக கூறும் அவர் மனுதாரர்கள் இதனை புரிந்து கொள்ளவில்லை என்கின்றார். அரசியல் யாப்பின் மும்மொழிகளிலும் சிற்சில முரண்பாடுகள் காணப்படுவதாக, அதன் அர்த்தங்கள் வேறுபடுவதாக குறிப்பிடும் அவர், அவ்வாறான முரண்பாடு தோன்றும்போது சிங்கள மொழியில் சொல்லப்பட்டிருப்பதே செல்லுபடியாகும் என்கின்றார்.
அதாவது சிங்கள மொழியில் பாராளுமன்றை „கலைக்கலாம்' என்று சொல்லப்பட்டுள்ளதாக அவரது வாதம் அமைகின்றது.

பாராளுமன்றத்தை கலைத்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தினால் முன் வைக்கப்பட்ட மனுவிசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பேசும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

70(1)உறுப்புரையின் படி யாப்பின் அடிப்படையில் அதிகார பிரியோகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எவ்வித நிபந்தனையும் இன்றி பாராளுமன்றம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பது தெளிவாக புரிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com