மன்னாரில் மைத்திரியுடன் இணைந்து நத்தார் பண்டிகை கொண்டாடினார் செல்வம் அடைக்கலநாதன்.
2018 அரச நத்தார் பண்டிகை 'யேசு பாலனின் பிறப்பும் நத்தார் கொண்டாட்டமும்' எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (16) பிற்பகல் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இக்கொண்டாட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவர் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கரோல் பாடல்கள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் அரச நத்தார் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டதுடன், 2018 அரச நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன.
இலங்கைக்கான வத்திகான் தூதுவர் அதிவண.பியேரே நுயென் வேன் வோட் ஆயர், இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் அதிவண.வின்சன்ட் பெர்ணான்டோ ஆயர், மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவண.எம்மானுவேல் பெர்ணான்டோ ஆயர் உள்ளிட்ட திருத்தந்தையர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment