எட்டுக் கொப்பிகளுடன் திருநகர் சென்று கிளப்புக்கு ஆட்சேர்த்த அனந்தி!
தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அரசியலுக்கு வந்தவர் புலிகளியக்கத்தில் சிறுவர் கட்டாய ஆட்சேர்ப்புக்கு பொறுப்பாகவிருந்த எழிலனின் மனைவி ஆனந்தி சதிதரன். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இவரது இருப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் (CLUB) என்ற அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
தனது கிளப்பினுள் விக்கினேஸ்வரனை கட்டிப்போட முனைந்து மூக்குடைபட்டு நிற்கும் இவர் தற்போது கிளப்புக்கு பல்வேறு வழிகளில் ஆட்சேர்த்து வருகின்றார்.
நேற்று முன்தினம் திருநகர் பகுதிக்கு அப்பியாசக் கொப்பிகள் பகிர்வதாக மக்களை அழைத்து தனது கிளப்புக்கு ஆட்சேர்க்கும் பணியில் ஈடுபட்ட விடயம் அங்கு பிசகிப்போனதாக இலங்கைநெட் அறிகின்றது.
சொகுசுக்கார் ஒன்றில் அனந்தி திருநகரை சென்றடைந்தபோது, வறுமைக்கோட்டின்கீழ் வாழும் அங்குள்ள மக்கள் சிலர் அப்பியாசக் கொப்பிகளை பெற்றுக்கொள்ள சென்றபோது, „நான் உங்களுக்கு கொப்பி கொண்டுவரவில்லை ஒரு வருடத்திற்கு முன்னர் எனது அமைச்சுக்கு வந்து பதிவு செய்தவர்களுக்கே கொப்பிகள் வழங்கப்படும்' என அதிர்சி பதில் கொடுத்துள்ளார் அனந்தி.
அத்துடன் உங்களுக்கு கொப்பி வேண்டுமாக இருந்தால் நீங்கள் என்னை வந்து சந்திக்கவேண்டும் என்றும் அடுத்தவருடம் பாடசாலை ஆரம்பிக்கும்போது கொப்பிகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். அதாவது, தனது இருப்பை வெளிப்படுத்தும் பொருட்டு அடிக்கடி இணையங்களிலும் முகப்புத்தகத்திலும் படம் போடுவதற்கு மக்கள் அவரை சந்திக்கவேண்டும், அதற்காக அவர் வருடம் ஒரு முறை 8 கொப்பிகள் வழங்குவார் என்பதுதான் அந்த சமாச்சாரம்.
இவர் நேற்று முன்தினம் வழங்கிய எட்டு கொப்பிகளின் பெறுமதி இலங்கை ரூபாவில் சொல்வதானால் 400 ரூபாய்கள். அமெரிக்க டொலரில் செல்வதானால் சுமார் 2 டொலர் 30 சதங்கள்.
25 கொப்பி பார்சல்கள் அதாவது 400 x 25 = 10000 ரூ செலவு செய்து யாழ்பாணத்திலிருந்து சொகுசு வாகனத்தில் திருநகர் சென்று அங்குள்ள மக்களுக்கு கடுப்பேற்றியுள்ளார். அக்கொப்பிகளை பெற்றுக்கொள்ளச் சென்ற 21 குடும்பங்களுக்கும் சன சமூக நிலையத்தில் வைத்து இரண்டரை மணிநேரம் அரசியல் வகுப்பெடுத்ததுடன் அவர்களை வரிசையில் நிறுத்தி கொப்பிகள் வழங்கும்போது பல கோணங்களிலும் படமும் எடுத்துள்ளார் அனந்தி சசிதரன். அத்துடன் ஊடகங்களுக்கு அங்கிருந்து பேட்டி வேறு வழங்கியுள்ளார்.
எஞ்சிய நான்கு பார்சல்களையும் அங்கு கொப்பி கேட்டுச்சென்ற நான்கு குடும்பங்களுக்கு தன்னை வந்து சந்திக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கிச் சென்றாராம் அனந்தி. இங்கு விளங்கிக்கொள்ள வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் கொப்பிகளை பெற்றுக்கொள்ளச் சென்றிருக்காத நான்கு குடும்பங்களுக்கும் அனந்தியின் வக்கிரம் புரிந்துள்ளது என்பதாகும். அவர்களுக்கு பாடம் படிப்பிக்கின்றேன் என்று பல்லையும் நறும்பினாவாம் அனந்தி.
அவலங்களை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்தும் இந்த ஈனப்பிறவிகளை தமிழ் சமூகம் என்று விரட்டியடிக்கப்போகின்றது?
0 comments :
Post a Comment