என்ன தியாகம் செய்தார்கள்? விஜய பாஸ்கரன்
துரையப்பா கொலையின் பின்னால் பலர் கொல்லப்பட்டனர். இதில் தமிழர்கள் சந்தோசப்பட்டதும் அந்தக் கொலையாளிகளைப் போற்றியதும் உண்மை. இவர்களை அடையாளம் தெரியாமல் ,தெரிந்தும் கைது செய்ய முடியாமல் தடுமாறியதும் வரலாறு.
ஆனால் அதே அவர்களே தங்களை அழித்தார்கள். காட்டிக் கொடுத்தார்கள். இந்த வரலாற்றை மக்கள் இன்னமும் உணரவில்லை.
மட்டக்களப்பைச் சேர்ந்த மைக்கல் என்பவரை பிரபாகரனே சமாதானமாக பேசிக்கொண்டே சுட்டுக் கொன்றார். இதே பிரபாகரன் நடவடிக்கைகள் சரியில்லை நான் விலகப் போகிறேன் என்ற பற்குணம் என்றவரை நட்பாகப் பேசிக்கொண்டிருந்தே கொலை செய்தார். ஜெயம் என்பவருக்கு பான்ரா குளிர் பானத்தில் விசம் கலந்து கொல்ல யோசனை வழங்கினார். இது தவறிப் போனது. கொடிகாமம் கண்ணாடி பத்மநாதன் எனபவரை அவரது குருவான செட்டி தனபாலன் மூலமாக கொலை செய்தார். இதே செட்டியை குட்டிமணி கொலை செய்தார். செல்லக்கிளி என்பவரை திருநெல்வேலி தாக்குதலின்போது பிரபாகரனே கொன்றதாக நம்பப்படுகிறது. மனோ மாஸ்ரர், ஒபரோய் தேவன் போன்றவர்களையும் புலிகளே கொன்றனர்.
இவர்கள் எல்லாம் யாருக்காக இறந்தார்கள்? யாருக்காக கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? மக்களுக்காகவா?
1982 இல் கந்தர்மடம் பாடசாலையில் காவலுக்கு நின்ற மூன்று இராணுவ வீரர்களைக் கொன்றார்கள். அதன் பதிலடியாக அங்கே 300 ஏழைகளின் குடிசைகள் எரிக்கப்பட்டது. அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஈழ மாணவர் பொது மன்றமும் உதவியது. புலிகள் வரவே இல்லை. இந்த தாக்குதல் மக்களுக்காகவா? இல்லை தங்கள் வீரம் பறைசாற்ற நடந்த தாக்குதல்.
1983 இல் தமது சகா சார்ள்ஸ் அன்ரனி கொலைக்குப் பழிவாங்க திருநெல்வேலியில் கண்ணிவெடி வைத்து 13 இராணுவத்தைக் கொன்றனர். அதன் விளைவு 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் யாழ் நகரில் கொல்லப்பட்டனர். நாட்டில் இனக் கலவரம் ஏற்பட்டு நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழர்கள் அகதிகளானார்கள். வெலுக்கடை சிறையில் 55 தமிழ் கைதிகள் கொல்லப்பட்டனர். புலிகளின் சுய கௌரவத்துக்காக நாடேஅழிந்தது.
இதைத் தொடர்ந்து பொலிகண்டியில் வைத்த கண்ணிவெடியின் விளைவாக 50 இற்கும் அதிகமான பொதுமக்கள் வல்வெட்டித்துறையில் பலியானார்கள். இதைப் படம் பிடித்து ரணகளம் என்ற பதிப்பாக வெளியிட்டு அனுதாபம் தேடி பணம் சம்பாதித்தனர்.
முல்லைத்தீவு, மன்னார், திரகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தாக்குதல்களை நடாத்தி தமிழ் கிராமங்களை காலிகளாக்கினார்கள். பல ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். புலிகள் எங்கே மக்களுக்காக போராடினார்கள்? மக்களைப் பாதுகாத்தார்கள்.
பொதைமக்களின் நல்ல கார்களை, வீடுகளை பலவந்தமாக பறித்து ஆடம்பரமாக உலாவந்தார்கள். மக்களுடம் நகை, பணம் எனகப்பம் கேட்டார்கள். உணவுகளைப் பறித்தார்கள் .இவர்களா மக்களுக்காக வாழ்ந்தவர்கள். போராளிகள்?
இந்திய இராணுவத்தை எதிர்க்க ஆர்பார்பாட்டம் செய்ய வருமாறு அழைத்து அந்த மக்களிடையே ஒழிந்து நின்று இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடாத்தினார்கள். ஒரு வலிந்து சண்டையை மக்களுக்குள்ளே நின்று உருவாக்கினார்கள். மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படவில்லை. இந்த மோதலின் பின் பாதுகாப்புக்காக வைத்தியசாலையைத் தளமாக்கி தாக்குதல் நடாத்தினார்கள். வைத்தியசாலை, நோயாளிகள், பொது இடம் எதைப் பற்றியும் கவலைப்படாத இவர்களா மக்களுக்காக நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள்?
இிந்திய இராணுவத்தோடு மோதமுடியாமல் நகரை விட்டே ஓடினார்கள். யாழ் பல்கலைக் கழகத்தை தளமாக்கி இந்திய இராணுவத்துடன் மோதினார்கள். வைத்தியசாலையும், பல்கலைக்கழகமும் என்னவென்று தெரியாத இவர்களுக்கா நாங்கள் அஞ்சலி செலுத்த வேண்டும்? இந்த நகரில் அவதிப்படும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்வதையே தடுத்தார்கள்.
மானிப்பாய் மெமோரியல் வைத்தியசாலைக்குள் இருந்து உடுவிலில் இருந்த இந்திய இராணுவ முகாம்மீது செல் தாக்குதல் நடாத்தினார்கள். இதற்குப் பதிலடியான தாக்குதலால் பல உயிர்கள் பலியாகின. வைத்தியசாலையும் சேதமடைந்தது. பல இடங்களில் துப்பாக்கி முனையில் உணவுகளைக் கொள்ளையடித்தனர். இவர்களா நமக்காக போராடினார்கள்.?
இந்திய இராணுவத்தோடு வலிகாமத்தில் மோதமுடியாமல் தோல்வி கண்டு வன்னிக் காடுகளுக்குள் ஓடி ஒழிந்த இவர்களா மாவீரர்கள்? இலங்கை இராணுவ முகாம்களில் பதுங்கி இருந்து இந்திய இராணுவத்தோடும் சக அமைப்புகளோடும் மோதிய இவர்களா மக்களுக்காக நாட்டுக்காக போராடினார்கள்.
பிரமேதாசாவோடு உறவாடி இராணுவ வாகனங்களில் கொழும்பு நகரில் உலா வந்தார்கள். இராணுவ உதவி பெற்று முள்ளிக்குளத்தில் புளொட் முகாம்களை தாக்கி பலரைக் கொன்றார்கள். அதே பிரேதாசாவோடு முரண்பட்டு யுத்தம தொடங்கினார்கள். திருகோணமலையில் ஒரு சில நிமிடங்களிலேயே மக்களே உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு தப்பி ஓடினார்கள். அவ்வளவு மக்கள் அக்கறை, வீரம், இவர்களுக்கு ஒரு அஞ்சலி, மரியாதை.
வடக்கில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களின் சொத்துகளை கொள்ளையடித்துவிட்டு விரட்டி அடித்தார்கள். கிழக்கிலே குழந்தைகளைக்கூட இரக்கமின்றி பள்ளிவாசல்களில் கிராமங்களில் படுகொலை செய்தார்கள். இவர்களா போராளிகள்? இவர்களா மனிதர்கள்? மிருகங்கள். இவர்களுக்கு எதுக்கு மரியாதை?
சந்திரிகா காலத்தில் இலங்கை இராணுவத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் வலிகாமத்தை விட்டே ஓடினார்கள். ஓடும்போது பல இலட்சம் மக்களை துப்பாக்கி முனையில் தென்மராட்சிக்கு கடத்தினார்கள். மக்களின் சொத்துக்களை திருடி மக்களுக்கே விற்றார்கள். தென்மராடசியில் இராணுவம் புகுந்தபோது மக்களை விட்டு இரவோடு இரவாக வன்னிக்கு ஓடினார்கள். இவர்கள் மாவீரர்கள்? மக்களுக்காக போராடியவர்கள்.
மாவிலாற்றில் வலிந்த யுத்தம் ஒன்றை உருவாக்கி மூதார் பிரதேச மக்களை ஓட வைத்தார்கள். இறுதியில் அவர்களும் முள்ளி வாய்க்கால்வரை பயந்தே ஓடினார்கள்.
எத்தனை இஸ்லாமிய மக்களை சிங்கள மக்களை ஏன் சொந்த இனத்தையே கொன்று குவித்த இவர்களா மக்களுக்காக நாட்டுக்காக போராடினார்கள். உயிர் விலை அருமை தெரியாமல் வாழ்ந்த இவர்கள் மனிதர்களே அல்ல.
இறுதி யுத்தத்தில் பல லட்சம் மக்களை கேடயமாக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் அஅழியக்கூடிய காரணமாக இருந்த இவர்களுக்காக கண்ணீர் சிந்துவதே கேவலம். முட்டாள்தனம்.
இிவர்கள் தம்முடைய ஆதிக்கத்தை நிறுத்தவே சண்டையிட்டார்கள், இறந்தார்கள். அதிகமான மக்களை, தமிழர்களை கொன்றதும் இவர்களே.
0 comments :
Post a Comment