பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதிவாசிகளின் தலைவரின் அறிவுறுத்தல் கேளீர்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்றத்தில் ஒற்றுமையாக செயற்படமுடியாவிடின் 2கோடி மக்கள் தொகையுள்ள இந்நாட்டினை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வது சிக்கலான விடயமாக இருக்கும் என கண்டியில் நடைப்பெற்ற தேசிய இயக்க பேச்சுவார்தையின் போது ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரீ வன்னிலஎத்தோ குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற அமைச்சர்கள் கட்சி மாறிக் கொண்டும் பாராளுமன்றத்தில் கலவரங்களில் ஈடுபாட்டு கொண்டும் இருக்கிறார்களே ஒழிய மக்களின் சுபீடச்சத்தை பற்றி எண்ணுவார்கள் இல்லை.மேலும் அவர் குறிப்பிடுகையில் நாட்டில் அபிவிருத்தி ஏற்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலையை தீர்க்க தேர்தல் ஒன்றே சிறந்த வழி என வன்னிலஎத்தோ கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையில் நாட்டின் இன்றைய சூழ்நிலையானது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த காலங்களில் நடைபெறாத அரசியல் நடத்தைகளே இப்பொழுது நடைபெறுகின்றது. பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களின் தீர்மானம் 2கோடி மக்களின் அபிவிருத்தியை தீர்மானிக்கின்றது. இது தொடர்பாக அமைச்சர்கள் பொறுப்பானவர்களாக சிந்தித்தல் வேண்டும். இச்சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வருதல் அத்தியவசியமான ஒன்றாகும். தேர்தல் ஒன்றே சிறந்த வழியாகும் என நான் நம்புகின்றேன்.
எங்கள் சார்பாகவும் ஒரு பிரதிநிதி அரசியல் களத்தில் உள்ள நிலையில் இன்றைய சூழ்நிலையில் அவரும் கட்சி மாறிவிடுவாரோ என்ற அச்சம் தோன்றியுள்ளது என அவர்குறிப்பிட்டார்.
மேலும் அநுராதபுரத இலங்கை பௌத்த பிக்குகள் பல்கலைக்கழகத்தில் முன்னால் வேந்தர் தும்முல்ல சீலக்கந்த தேரர் கருத்து வெளியீடுகையில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டின் அராஜகமும் தலைதூக்கியுள்ளது. இவற்றையெல்லாம் மக்கள் அவதானித்த வண்ணம் உள்ளனர். அரசியல்வாதிகளும் கட்சி தாவிக் கொண்டிருக்கினறனர். மக்களுக்கு முன் உதாரணமாக அவர்கள் செயற்படுவதாக தெரியவில்லை.இவற்றை கருத்தில் கொண்டு உறுதியான தீர்மானத்திற்க வருவதே சிறந்தது என குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment