நாமலின் நிலைமை சிக்கலாகின்றது. குற்றச்சாட்டுக்கள் புஷ்வானமாகுமா?
ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக தகவல்களை வெளியிட்டவர் மோசடி தடுப்பு படையணி என்ற அமைப்பொன்றின் தலைவர் நாமல் குமார. இவரது குற்றச்சாட்டின் பெயரில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குனர் டிஐஜி நாலக டி சில்வா கைது பெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்தது.
இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாமல் குமாரவின் தொலைப்பேசியில் அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஹொங்கோங் எடுத்துச் சென்றனர். அங்கு அவர்கள் மீட்டெடுத்துவந்துள்ள ஒலிப்பதிவுகளில் ஜனாதிபதி மற்றும் கோத்தாபே ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய முயற்சித்தமைக்கான எவ்வித ஆதாரங்களும் குறித்த ஓலிப்பதிவுகளினூடாக கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெற்றுக்கொண்ட ஒலிப்பதிவுகளை பல முறை மீளாய்வு செய்த போதும் ஜனாதிபதியின் கொலை முயற்சி; தொடர்பான எவ்வித ஒலிப்பதிவும் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
நாமல் குமாரா மற்றும் பொலிஸ் அதிகாரி நாலக சில்வா ஆகிய இருவரினதும் உரையாடல்கள் உள்ள ஒலிப்பதிவுகள் பல இருந்துள்ளது. அவற்றில் சில உரையாடல்கள் 39-40 நிமிடங்கள் நீண்டதாக இடம் பெற்றுள்ளது.
நாமல் குமார தனக்கு பாதகமான சில உரையாடல் பதிவுகளை அழித்துள்ளதுடன் கொலை முயற்சி தொடர்பான தகவல் அடங்கிய உரையாடல்பதிவுகளை மாத்திரம் அழிக்காமல் வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்கள் நிரூபிக்க தவறும் பட்சத்தில் நாமல் குமாரவின் நிலைமை மோசமடையும் என்பதையும் பாரிய சட்டச் நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்பதையும் உறுதியாகக்கூறமுடியும்.
0 comments :
Post a Comment