பிரதமர் பதவியை ராஜனாமா செய்கின்றார் நாளை.
நாளைய தினம் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற அமைச்சர் லக்ஸமன் யாபா குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னரே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
நாளை மக்களுக்கான விஷேட அறிவித்தலுடன் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் பதவி விலகுவார் என அவரது புத்திரன் நாமல் ராஜபக்ச இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள கட்சிக்கு சந்தர்ப்பத்தை அளித்து வரும் பாராளுமன்ற தொடரில் எதிர்கட்சி ஆசனத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்றில் புதிய அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதுடன், ஜனாதிபதி புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க வேண்டிய கடப்பாட்டிற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் மஹிந்த தானாக ராஜனாமா செய்யாவிட்டால் ஜனாதிபதியால் புதிய பிரதமரை நியமிக்க முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment