சிறைசெல்வதிலிருந்து தப்பிக்கவே மஹிந்தர் பிரதமர் பதவியை ஏற்றாராம். அனுரகுமார
இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியை ஏற்றுக்கொண்டது சிறைக்கு செல்வதிலிருந்து தப்பிக்கவே என மக்கள் விடுதலை முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 'முறையற்ற அரசியல் கலாசாரத்தை முறியடித்து ஜனநாயகத்தை காப்போம்' தொனிப்பொருளில் வாரியப்பொலவில ;நடைப்பெற்ற கூட்ட்த்தின் போதே இவ்வாறு தெரிவி;த்தார்.
மேலும் அவர் கூறுகையில் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போது பாராளுமன்றத்தில் அவரை கேலியாக இழிவான முறையில் பேசினர். இந்நிலையில் அவரை கண்டதும் மிகவும கவலையடைந்தோம். ஏன் இவர் இத்தனை எதிர்ப்பிலும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எம் எல்லோர் மனதிலும் எழுந்தது.
ரணில் ஆட்சியினை பொறுப்பேற்ற 3 வருடங்களில் நாட்டை சீரழித்தார். மிகுதியான காலத்தில் ராஜபக்ஷ அவர்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும். மஹிந்த அவர்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்காமல் போயிருந்தல் நாட்டை மீட்க முடியாமல் போயிருக்கும் என மஹிந்த தரப்பினர் கூறுகின்றனர். இன்று ரூபாவின் விழ்ச்சி கண்டுள்ள நிலையில் பொருளாதாரத்தின் வீழ்;ச்சியையும் நாம் காண்கின்றோம். நாட்டை மீட்க வந்தவர்கள் 179 இருந்து 182 ரூபாவிற்கு டொலரின் விலை உயர்ந்த போது என்ன செய்தார்கள். வடக்கில் மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ள இனவாதம் நாட்டை காப்பற்ற பதவியேற்றவர்களின் எண்ணங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
மைத்திரி அவர்கள் குருணாகலில் தென்னந் தோப்பு ஒன்றில் மறைந்திருந்தே ஜனவரி 8ம் திகதி தேர்தல் முடிவை கேட்டார் என்று பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தேர்தலில் தான் தோற்றால் குடும்பத்துடன் மண்ணோடு மண்ணாக போக நேரிடும் என மறைமுகமாக மஹிந்த அச்சுறுத்தலினை குறிப்பிட்டிருந்தார். இத்தகைய சம்பவங்களின் பின்னரே சட்டபுர்வமற்ற திருமணத்தைப் போல இக்கூட்டனி இணைந்துள்ளது.
இந்நிலையில் வரும் சட்டரீதியான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க மஹிந்த உட்பட தரப்பினருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. விரைவாக முடிவெடுக்காவிடின் மஹிந்த அவர்களின் தேர்தல் நடவடிக்கைகள் சிறையிலேயே நடைபெறும் என குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment