சட்டம் ஒழுங்கு அமைச்சை மைத்திரியே வைத்துக்கொள்வாராம்.
நாளை புதிய அமைச்சரவை நியமனமாகவுள்ளது. நாளை பிரத மந்திரியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ள அதேநேரம் சில அமைச்சர்களும் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாரமளிக்காமல் அதை தனது கையிலேயே வைத்துக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை கொல்லத்திட்டமிடப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பான விடயங்களின் பிரதான சூத்திரதாரிகளாக ரணில் விக்கரமசிங்க, சரத் பொன்சேகா, ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இருப்பதால் , சட்டம் ஒழுங்கு அமைச்சை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் விடுவது பொருத்தமற்றது என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் சபாநாயகருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இதுவிடயமாக பேசப்பட்டபோதும் ஒரு முடிவினை எட்டியிருக்கவில்லை என்றும் அறியமுடிகின்றது.
0 comments :
Post a Comment