குட்டிமணி-ஜெகன்-தங்கத்துரை யின் சட்டத்தரணிக்கு சிவாஜிலிங்கம் இருட்டடி போட்ட கதை கேளீர்.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இச்சம்பவங்களில் நடந்திருக்கக்கூடாத சம்பவங்களே அதிகம். ஆனாலும் ஒவ்வொரு அமைப்புக்களும் தங்களுக்கு சாதகமானவற்றை காவியங்கள்போல் மாற்றியமைத்து தொடர்ந்தும் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இச்சூழ்நிலையில் விடுதலைப்போராட்ட காலத்தில், இயக்கங்களாலும் அதன் உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்ட அருவருக்கத்தக்க செயற்படுகளை மக்களின் மீட்டலுக்கு கொண்டு வருதல் பொருத்தமானது என இலங்கைநெட் கருதுகின்றது. அந்த வகையில் ரெலோவின் சிவாஜிலிங்கம் தொடர்பான பதிவு இது.
குட்டிமணி, தங்கத்துரை , ஜெகன் உள்ளிட்ட ரெலோவின் முன்னணி உறுப்பினர்கள் பலர் பயங்கரவாத தடுப்புச் சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக அன்றைய பெடரல் கட்சியின் முன்னணி வக்கீல்கள் பலரும் களமிறங்கியிருந்தனர்.
அவர்களில் குட்டிமணிக்கான சிரேஸ்ட சட்டத்தரணியாக செயற்பட்ட சத்யேந்திரத்தின் கனிஷ்ட சட்டத்தரணியாக நவரட்ணம் கரிகாலனும் ஜெகனுக்கான சிரேஸ்ட சட்டத்தரணியாக உருத்திரமூர்த்தியும் செயற்பட்டனர். வழக்கில் இவர்கள் தோற்றனர் என்பதும் சந்தேக நபர்கள் யாவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்த விடயம்.
இச்சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் இறக்க அங்கு ஓர் வெற்றிடம் உருவானது. அவ்வெற்றிடத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளம்செயற்பாட்டாளராகவிருந்த நவரட்ணம் கரிகாலனை நியமிப்பது என கட்சி தீர்மானித்தது. கட்சியின் முன்மொழிவை ஏற்க மறுத்த கரிகாலன் அவ்விடத்திற்கு குட்டிமணியை நியமிக்குமாறு கட்சியை கேட்டுக்கொண்டார். அதன் பிரகாரம் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வெற்றிடத்திற்கு குட்டிமணியை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணையகத்திற்கு அறிவித்தது. மரண தண்டனை கைதியாகவுள்ள குட்டிமணியை பாராளுமன்றுக்கு கொண்டுவந்து அவரூடாக உணர்ச்சி பேச்சுக்களை கொடுத்து தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்தல்தான் அதன் நோக்கம். இந்த கபட நோக்கத்தை அறிந்துகொண்ட பாராளுமன்ற செயலளார் நாயகம் 'குற்றவாளி ஒருத்தர் பாராளுமன்றுக்கு செல்ல முடியாது என்ற சட்டத்தின் சரத்துக்களை எடுத்துரைத்து தனது எதிர்ப்பை தேர்தல்கள் ஆணையகத்திற்கு அறிவித்திருந்தார். அத்துடன் தேர்தல்கள் ஆணையகம் குட்டிமணியை பாராளுமன்றிற்கு அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது.
இதன்காரணமாக வெற்றிடத்திற்கு நீலன் திருச்செல்வத்தை நியமித்தது தமிழர் விடுதலைக் கூட்டணி.
இதன் பின்னர் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகளுக்கான அறையில் வழமைபோல் அரசியல் ரீதியான விவாதம் ஒன்று கரிகாலனுக்கும் உருத்திரமூர்த்திக்குமிடையே இடம்பெற்றது. அப்போது, 'பொத்தடா வாயை வண்.....ர பயலே என்றார் உருத்திரமூர்த்தி. கரிகாலன் உண்மையிலே பாராளுமன்ற பதவியை ஏற்றுக்கொள்ளாததற்கு காரணமே அதுதான். தான் பதவி ஏற்றால் ஊடகங்கள் தனது சாதியை இழுத்துப்பேசும் என்றும் அது பெரும் அவமானம் என்ற தாழ்வுச்சிக்கலாலேயே அவர் அந்த பதவியை ஏற்கவில்லை என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு தனது ஞாதியை சொல்லி பேசிய சக வக்கீலுடன் அதி உச்ச ஆத்திரம் கொண்டிருந்த கரிகாலனுக்கு சிவாஜிலங்கத்துடன் நல்ல பழக்கம் இருந்தது. அந்த பழக்கம் எவ்வாறு என்றால் குட்டிமணி குழுவினரின் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சிவாஜிலிங்கம் அடிக்கடி கரிகாலனை சந்திக்க செல்வார். உருத்திரமூர்த்தி மீது ஆத்திரம் கொண்டிருந்த கரிகாலன் சிவாஜிலிங்கத்திற்கு கொந்தராத்து வழங்கினார்.
ஒரு நாள் உருத்திரமூர்த்தி கிறீன்லாண்டஸ் ஹொட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது நுழைந்த சிவாஜிலிங்கம் உருத்திரமூர்த்திக்கு போட்டுப்பிடித்துவிட்டு மாயமாக மறைந்து விட்டார். இன்றுவரை உருத்திரமூர்த்திக்கு தெரியாது தான் வழக்காடிய ஒரு விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்தான் தனக்கு போட்டு பிடித்தது என்று.
கூலிப்படைகள் விடுதலை போராட்டம் என்ற போர்வையை எவ்வாறு போர்த்தியிருந்துள்ளார்கள் என்பது இப்போதாவது புரிகின்றதா?
இவ்வாறான சரித்திரங்களை எதிர்கால சமூதாயம் அறியவேண்டும் என்றால் இதை பகிருங்கள் அத்துடன் உங்களுக்கு தெரிந்தவற்றை இலங்கைநெட்டுக்கு அனுப்பி வையுங்கள்.
0 comments :
Post a Comment