சிறிசேன உனக்கு சொல்கின்றேன், செவ்வாய்கிழமைக்கு முன்னர் தீர்வு தராவிட்டால், தெருவுக்கு இழுத்து வீசுவேன். ஹரீன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு முன்னர் தீர்வொன்றை வழங்காவிட்டால், அவரை வீட்டிலிருந்து இழுத்துவந்து தெருவில் வீசுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டு கூறியுள்ளார்.
மக்கள் பேரணி ஒன்றின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து பேசுகையில்,
மக்களே நாம் இன்று மேற்கொள்ளுகின்ற போராட்டமானது இந்த நாட்டை கொண்டு செல்வதற்கான சட்டத்தை காப்பதற்கான போராட்டம். அன்புள்ள தாய்மாரே தந்தையரே நாம் இராப்பகலாக இப்போராட்டத்தை மேற்கொள்வது அதிகார மோத்தால் அல்ல. ஆனால் நாம் அதை காப்பதற்காக கதிரையில் அமர்த்திய நபர் அதை மீறும்போது நாம் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும்.
நாம் இன்று தெருவழியாக வந்தபோது இதையே நாட்டு மக்களும் வேண்டுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்டோம். எனவே மக்களே இறங்குங்கள் அனைவரும் தெருவுக்கு என அழைப்பு விடுத்தார் ஹரேன் பெர்னான்டு.
0 comments :
Post a Comment