Sunday, December 16, 2018

பதினைந்து மாவீரர்களை கொண்ட எனக்கு மாவீரர்களை பற்றி வகுப்பெடுகின்றனர் - பிரதேச சபை உறுப்பினர் நகுலேஸ்வரன்

எனது குடும்ப சூழல் பதினைந்துக்கு மேற்பட்ட மாவீரர்களை கொண்டது. ஆனால் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் உள்ள தமிழரசு கட்சி இளைஞர்கள் எனக்கு மாவீரர்கள் பற்றியும் அவர்களின் தியாகம் பற்றியும் வகுப்பெடுகின்றனர் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் சுதந்திர கட்சி உறுப்பினர் நாகராசா நகுலன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதேச சபை என்பது பிரதேச அபிவிருத்திக்கு பொறுப்பான ஒரு கட்டமைப்பு. ஆனால் எங்களுடைய சபையானது கூடுகின்ற ஒவ்வொரு அமர்விலும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் அபிவிருத்திக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காது மாவீரர்கள் பற்றியும் அவர்களின் தியாகம் பற்றியும், பேசி அறிக்கையில் அதனை இடம்பெறச் செய்வதனை நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் நாங்கள் இதனை தட்டிக் கேட்கின்ற போது அவர்கள் மாவீரர்களின் தியாகம் பற்றி எங்களுக்கு வகுப்பெடுகின்றனர். பதினைந்துக் மேற்பட்ட மாவீரர்களை கொண்ட குடும்பச் சூழலில் முப்பது வருட போராட்டத்தின் தியாகங்கள், துன்ப துயரங்களை கடந்து வந்த எனக்கு இவர்கள் வகுப்பெடுப்பது நகைசுவையானது எனத் தெரிவித்த அவர்,

மக்கள் எங்களை வாக்களித்து சபைக்கு அனுப்பியது மற்றவர்களுக்கு தியாகி துரோகி பட்டம் வழங்குவதற்கும், மாவீரர்களை பற்றி பேசுவதற்கும் அல்ல மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஓரளவுக்காவது தீர்ப்பதற்கே எனவே நாமும் அதற்கேற்வகையில் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மாறாக கட்சி நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, செயற்படுவதனையும், கட்சியை வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு பாதீடு தயாரித்து அதனை நிறைவேற்ற கோருவதனையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் மக்களின் நலன்சார்ந்த எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பாதீட்டை நாம் எதிர்த்து வாக்களித்தோம் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com