அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் புரளியை கிளப்பிக்கொண்டிருக்கின்றார் புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை இராணுவத் தளபதியாகவிருந்து பின்னர் அரசின் பக்கம் சாய்ந்து கொண்ட கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன்.
கடந்தவாரம் அவர் ட்விட்டரில் இட்டபதிவு ஒன்றில் பொட்டு அம்மான் எனப்படும் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் நாட்டைவிட்டு தப்பியோடி நோர்வேயில் பகுங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இக்கருத்து பல்வேறு சர்சைகளை கிளப்பியிருந்த நிலையில், பொட்டு இறந்தவிட்டதாக ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.
வவுனியாவிலுள்ள வவுனியா ஊடகமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர்,
தற்போது நாட்டில்; ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி இறந்தவர்களிற்கு உயிர்கொடுக்க பலர் முனைகின்றார்கள். இன்று பொட்டம்மானை கொண்டுவந்திருக்கிறார்கள் இனிவரும் காலங்களிலே தளபதிகளான பால்றாஜ், கிட்டு, செல்லகிளி போன்றவர்களையும் கொண்டுவரக் கூடியவாய்புகள் இருக்கிறது.;.
தற்போது புலம்பெயர் தேசத்திலே இருக்ககூடிய காகித புலிகள் தலைமைசெயலகம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், என்ற பெயர்களில் இயங்கிவருகிறார்கள். தலைமைசெயலகம் என்பது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான கைவேலியில் மாத்திரமே இருந்தது. வெளிநாடுகளில் அதனை நிறுவச்சொல்லி எமது தலைவர் ஒருபோதும் கூறவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது கட்டமைப்புகளை கலைத்துவிட்டு இங்கு வருகைதந்து மக்களிற்கு தேவையான விடயங்களை செய்யுமாறுகேட்டுகொள்கிறோம்' என க.துளசி பகிரங்கவேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை தமிழர்களின் பேரம்பேசும் சக்தியாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நீண்டகாலமாக சிறையில்வாடும் அரசியல் கைதிகளின் விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்ற திட்டங்களை தாம்வழங்கியிருப்பதாகவும் கூறிய துளசி, அவர்களின் விடுதலைதொடர்பாக ஓரிரு தினங்களில் கூடடமைப்பின் தலைவர் சம்பந்தன் முக்கியமான செய்தியைவெளியிடுவார் என்று தாங்கள் எதிர்பார்கிறோம்' என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment