Thursday, December 6, 2018

தீர்ப்பை ஒரு நாள் பின்தள்ளியது உச்ச நீதிமன்று. தொடர்கின்றது இடைக்காலத் தடை.

நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அரச நாளிதழுக்கு உச்ச நீதிமன்று இடைக்கால தடையுத்தரவு விதித்திருந்தது.

இவ் அரசநாளிதழ் அரசியல் யாப்பை மீறுகின்றது என்றும் ஜனாதிபதிக்கு அவ்வாறான அதிகாரங்கள் 19ம் திருத்தின் பின்னர் இல்லை என்றும் 122 பாராளுமன்ற உறுப்பினர்களும் மேலும் சில தனிநபர்களும் சமர்ப்பித்த மனுவை விசாரணை செய்த 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகளே இவ்விடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தனர்.

அத்துடன் 4,5,6 திகதிகளின் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு 7 ம் திகதி இறுதித்தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை இந்த தடை நீடிக்கப்படும் என சற்றுமுன்னர் அறிவித்துள்ள உச்ச நீதிமன்று, நாளை 7 ம் திகதியும் விசாரணைகள் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இறுதி தீர்ப்பு எதிர்வரும் 8ம் திகதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாமே குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment