தமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.
வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் முன் பதிவு செய்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற டீலை செய்து தமிழ் தலைவர்கள் தமது உயிர்களை பாதுகாத்துக்கொண்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் அங்கு பேசுகையில் கொழும்பில் கொல்லப்பட்ட ரவிராஜ் அவர்கள் பிரதி மேயராக வரும்வரைக்கும் புலிகளால் குறிவைக்கப்பட்டிருந்தார் என்ற விடயத்தினையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை.
அங்கு அவர் மேலும் பேசுகையில் :
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரான நிகழ்வுகளை பார்த்தால், ஜனநாயகத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இலக்கு வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவதை பார்கின்றீர்கள். அந்த வகையில் கடைசியாக தனது உயிரை இழந்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள். அதற்கு முன்னர் திருகோணமலையில் பா.உ தங்கத்துரை அவர்கள். எமது பிரதேசத்தை சேர்ந்த ரவிராஜ் அவர்கள் குறிவைக்கப்பட்டிருந்தார். மேயர்களான சிவபாலன், சரோஜினி யோகேஸ்வரன் என தொடர்சியாக மக்கள் பிரதிநிதிகள் கொல்லப்பட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இவ்வாறான நிலையில் தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்கவேண்டுமாக இருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் ஒரு டீலுக்கு போகவேண்டியிருந்தது.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே எனச் சொல்லிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புக்களை பிடித்து இணைத்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தினுள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகளே எனப்புகுத்தி தம்மை உலக நாடுகளில் அங்கிகாரம் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் இருந்தது.
அந்த அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பூடாக புலிகள் தங்களுக்கான உலக அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்கள் எமது தலைவர்கள் தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொண்டார்கள். இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவான டீல்.
சயந்தனின் குறித்த துணிகரப் பேச்சானது நிச்சயமாக வரவேற்க வேண்டிய ஒன்றாகவே காணப்படுகின்றது. சிறிதரன் போன்ற அரசியல் விபச்சாரிகள் இன்றும் புலிகளை வைத்து தமிழ் மக்களிடம் வாக்கு பிச்சை கேட்க செல்லுகின்றத தருணத்தில் இளம் அரசியல்வாதியாக உண்மையை நிமிர்ந்து நின்று சொல்லுகின்ற துணிவினால் எதிர்கால சந்ததி தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது.
சுயந்தனின் பேச்சை இங்கு கேட்கலாம்.
0 comments :
Post a Comment